கால்பந்து

ஸ்பெயின் கால்பந்து அணியின் பயிற்சியாளராக லூயிஸ் என்ரிக்ஸ் நியமனம் + "||" + Louis Enrix appointed as the coach of the Spanish football team

ஸ்பெயின் கால்பந்து அணியின் பயிற்சியாளராக லூயிஸ் என்ரிக்ஸ் நியமனம்

ஸ்பெயின் கால்பந்து அணியின் பயிற்சியாளராக லூயிஸ் என்ரிக்ஸ் நியமனம்
ஸ்பெயின் கால்பந்து அணியின் பயிற்சியாளராக லூயிஸ் என்ரிக்ஸ் நியமனம் செய்யப்பட்டார்.
மாட்ரிட்,

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஸ்பெயின் அணியின் பயிற்சியாளராக இருந்த ஜூலென் லோப்டெகு, உலக கோப்பை கால்பந்து போட்டி தொடங்குவதற்கு ஒரு சில நாட்கள் இருக்கையில் ரியல் மாட்ரிட் கிளப்பின் பயிற்சியாளர் பொறுப்புக்கு பேச்சுவார்த்தை நடத்தியதை அறிந்த ஸ்பெயின் கால்பந்து சங்கம் அவரை அதிரடியாக நீக்கியது. உடனடியாக ஸ்பெயின் அணியின் புதிய பயிற்சியாளராக அந்த நாட்டின் முன்னாள் வீரர் பெர்னாண்டோ ஹியரோ நியமிக்கப்பட்டார்.

உலக கோப்பை போட்டியில், முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணி 2-வது சுற்றில் ரஷியாவிடம் பெனால்டி ஷூட்-அவுட்டில் தோல்வி கண்டு வெளியேறியது. இதனை அடுத்து பெர்னாண்டோ ஹியரோ நேற்று முன்தினம் தனது பதவியில் இருந்து விலகினார். இந்த நிலையில் ஸ்பெயின் அணியின் புதிய பயிற்சியாளராக அந்த நாட்டை சேர்ந்த முன்னாள் வீரரான 48 வயது லூயிஸ் என்ரிக்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை ஸ்பெயின் கால்பந்து சம்மேளனம் நேற்று அறிவித்தது. அவர் 2 ஆண்டு காலம் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். லூயிஸ் என்ரிக்ஸ் பார்சிலோனா அணியின் முன்னாள் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.