கால்பந்து

பிரிக்ஸ் கால்பந்து போட்டி: தென்னாப்பிரிக்கா அணி வெற்றி + "||" + BRICS football match: South Africa team win

பிரிக்ஸ் கால்பந்து போட்டி: தென்னாப்பிரிக்கா அணி வெற்றி

பிரிக்ஸ் கால்பந்து போட்டி: தென்னாப்பிரிக்கா அணி வெற்றி
பிரிக்ஸ் கால்பந்து போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 1-5 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்க மகளிர் அணி வெற்றிபெற்றது. #BRICSFootball
ஜோகன்னர்ஸ்பர்க்,

பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையிலான 17 வயதுக்குட்பட்ட மகளிர் கால்பந்து போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில் ரஷியா, சீனா, பிரேசில், இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-5 என்ற கோல் கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது.

பரபரப்பாக நடைபெற்ற முதல் பாதி ஆட்டத்தில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமனில் இருந்தன. அதை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதியில் தென்னாப்பிரிக்க அணி ஆதிக்கம் செலுத்தியது.

இரண்டாவது பாதியில் தென்னாப்பிரிக்க அணி 4 கோல்களை அடித்தது. முன்னதாக இந்திய அணி சார்பில் வன்லால்ரியாத்ரி ஒரு கோலடித்தார்.

அடுத்து நடைபெற உள்ள இரண்டாவது ஆட்டத்தில் இந்திய அணி ரஷியாவை எதிர்கொள்கிறது.