கால்பந்து

யு16 கால்பந்து போட்டி: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜப்பான் அணி வெற்றி + "||" + U-16 football match: Japan team wins match against India

யு16 கால்பந்து போட்டி: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜப்பான் அணி வெற்றி

யு16 கால்பந்து போட்டி: இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜப்பான் அணி வெற்றி
யு16 கால்பந்து போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஜப்பான் அணி வெற்றிபெற்றது. #U16Football
அம்மான்,

5வது டபிள்யு.ஏ.எஃப்.எஃப் யு-16 சாம்பியன்ஸ்ஷிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் ஜப்பான் அணி வெற்றிபெற்றது.

ஆட்டம் தொடங்கிய 26வது நிமிடத்தில் இந்திய அணியின் சார்பில் விக்ரம் பிரதாப் 1 கோல் அடித்தார். இதனை அடுத்து ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் ஜப்பான் அணி வீரர்கள் 2 கோல்கள் அடித்து அணியை முன்னிலை பெற செய்தனர். இதில் ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் குராபா கொண்டோவும், 64வது நிமிடத்தில் ஷோஜி டொயோமாவும் தலா 1 கோல் அடித்தனர். இதன்மூலம் 1-2 என்ற கோல்கணக்கில் ஜப்பான் அணி, இந்தியாவை வீழ்த்தியது.


இது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் கூறுகையில், இது நம் அணியினருக்கு ஒரு சிறப்பான தருணமாகும். ஜப்பான் அணிக்கு எதிரான ஆட்டம் திருப்தி அளிக்கும் வகையில் இருந்தது. ஆட்டத்தின் முதல் பாதியில்1-0 என்ற கோல் கணக்கில் முன்ணனியில் இருந்தோம். ஆனால் இரண்டாவது பாதி ஆட்டத்தில் ஜப்பான் அணியினர் சிறப்பாக செயல்பட்டனர். வலிமையான ஜப்பான் அணிக்கு எதிரான ஆட்டம் இந்திய அணியினருக்கு புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது’ என்று கூறினார்.