கால்பந்து

2024–ம் ஆண்டுக்கான ஐரோப்பிய கால்பந்து போட்டியை நடத்தும் உரிமத்தை பெற்றது, ஜெர்மனி + "||" + For 2024 European football competition Gained license, Germany

2024–ம் ஆண்டுக்கான ஐரோப்பிய கால்பந்து போட்டியை நடத்தும் உரிமத்தை பெற்றது, ஜெர்மனி

2024–ம் ஆண்டுக்கான ஐரோப்பிய கால்பந்து போட்டியை நடத்தும் உரிமத்தை பெற்றது, ஜெர்மனி
24 அணிகள் இடையிலான ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

நியான், 

24 அணிகள் இடையிலான ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. 16–வது ஐரோப்பிய கால்பந்து போட்டி 2020–ம் ஆண்டு பான் ஐரோப்பிய நாடுகளில் (12 நாடு) நடத்தப்படுகிறது.

இந்த நிலையில் 2024–ம் ஆண்டுக்கான 17–வது ஐரோப்பிய கால்பந்து போட்டியை நடத்துவதற்கு ஜெர்மனியும், துருக்கியும் உரிமம் கோரின. இதற்கான ஓட்டெடுப்பு சுவிட்சர்லாந்தின் நியான் நகரில் நேற்று நடந்தது. இதில் ஜெர்மனி 24 ஓட்டுகள் பெற்று ஐரோப்பிய கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பை தட்டிச்சென்றது. துருக்கிக்கு 4 உறுப்பினர்களின் ஓட்டுகளே கிடைத்தன. ஜெர்மனியில் ஐரோப்பிய போட்டி நடக்க இருப்பது 1988–ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.