கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை–பெங்களூரு அணிகள் இன்று மோதல் + "||" + ISL Football: Chennai-Bengaluru teams Confrontation today

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை–பெங்களூரு அணிகள் இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை–பெங்களூரு அணிகள் இன்று மோதல்
5–வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தொடரில் பெங்களூருவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2–வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, பெங்களூரு எப்.சி. அணியை எதிர்கொள்கிறது.

பெங்களூரு, 

5–வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி தொடரில் பெங்களூருவில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2–வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, பெங்களூரு எப்.சி. அணியை எதிர்கொள்கிறது. மெயில்சன் ஆல்வ்ஸ் தலைமையிலான சென்னையின் எப்.சி. அணி வெற்றியுடன் போட்டியை தொடங்க முனைப்பு காட்டும். அதேநேரத்தில் சுனில் சேத்ரி தலைமையிலான பெங்களூரு எப்.சி. அணி தனது அறிமுக சீசனிலேயே (கடந்த ஆண்டு) இறுதிப்போட்டி வரை முன்னேறி சென்னை அணியிடம் இறுதிஆட்டத்தில் தோல்வி கண்டது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க அந்த அணி தீவிரம் காட்டும். எனவே வலுவான இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரண்டு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் சென்னை அணி 2 முறையும், பெங்களூரு அணி ஒரு முறையும் வென்று இருக்கின்றன.