நட்புறவு கால்பந்து: இந்தியா–சீனா ஆட்டம் ‘டிரா’


நட்புறவு கால்பந்து: இந்தியா–சீனா ஆட்டம் ‘டிரா’
x
தினத்தந்தி 13 Oct 2018 9:00 PM GMT (Updated: 13 Oct 2018 8:21 PM GMT)

இந்தியா–சீனா அணிகள் இடையிலான நட்புறவு கால்பந்து போட்டி சீனாவில் உள்ள சுஜோவ் நகரில் நேற்று நடந்தது.

சுஜோவ், 

இந்தியா–சீனா அணிகள் இடையிலான நட்புறவு கால்பந்து போட்டி சீனாவில் உள்ள சுஜோவ் நகரில் நேற்று நடந்தது. 21 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகளும் சந்திப்பதால் இந்த ஆட்டம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியது. இந்த ஆட்டத்தில் பந்து அதிக நேரம் சீன அணியினரின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை. சீனா அணி முதல் பாதி மற்றும் பின் பாதியில் கோல் அடிக்க பலமுறை முயற்சி மேற்கொண்டது. ஆனால் இந்திய அணியின் கோல்கீப்பர் குர்பிரீத்சிங் சந்து மற்றும் பின்கள வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு கோல் விழாமல் பார்த்து கொண்டனர். இந்திய அணி வீரர் நிகில் கடைசி நிமிடத்தில் கோல் அடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்தது. அவர் அடித்த பந்தை சீன கோல் கீப்பர் கையால் தடுத்து வெளியேற்றினார். கடைசி வரை போராடியும் இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. முடிவில் இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் (சமன்) முடிந்தது. 18–வது முறையாக சீனாவுடன் மோதிய இந்திய அணி, அந்த அணிக்கு எதிராக ஒரு வெற்றியை கூட பெற்றதில்லை என்ற சோகம் தொடருகிறது. 12 முறை தோல்வியும், 6 முறை டிராவும் கண்டுள்ளது.


Next Story