கால்பந்து

ஆசிய கிளப் கால்பந்து போட்டியில் பங்கேற்க சென்னையின் எப்.சி. அணிக்கு வாய்ப்பு + "||" + Participate in the Asian Club Football Tournament Chennai FC Team Opportunity

ஆசிய கிளப் கால்பந்து போட்டியில் பங்கேற்க சென்னையின் எப்.சி. அணிக்கு வாய்ப்பு

ஆசிய கிளப் கால்பந்து போட்டியில் பங்கேற்க சென்னையின் எப்.சி. அணிக்கு வாய்ப்பு
38–வது ஆசிய கிளப் அணிகளுக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2019) பிப்ரவரி 5–ந் தேதி தொடங்கி நவம்பர் வரை பல்வேறு நாடுகளில் நடக்கிறது.

சென்னை, 

38–வது ஆசிய கிளப் அணிகளுக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2019) பிப்ரவரி 5–ந் தேதி தொடங்கி நவம்பர் வரை பல்வேறு நாடுகளில் நடக்கிறது. இந்த போட்டியில் முதல்முறையாக ஐ.எஸ்.எல். போட்டியின் நடப்பு சாம்பியனான சென்னையின் எப்.சி. மற்றும் ஐ லீக் சாம்பியனான மினர்வா பஞ்சாப் ஆகிய அணிகள் பங்கேற்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இதற்கான தகுதி சுற்றில் மினர்வா பஞ்சாப் அணி பிப்ரவரி 12–ந் தேதி சாய்வா அணியை (ஈரான்) எதிர்கொள்கிறது. இதேபோல் சென்னையின் எப்.சி.அணி தனது ‘பிளே–ஆப்’ சுற்று ஆட்டத்தில் மார்ச் மாதத்தில் டிரான்ஸ்போர்ட் எப்.சி. (பூட்டான்) அல்லது கொழும்பு எஸ்.சி. அணியை உள்ளூர், வெளியூர் அடிப்படையில் சந்திக்கும். இதில் வெற்றி பெற்றால் சென்னையின் எப்.சி. அணி ஆசிய கிளப் அணிகளுக்கான சாம்பியன்ஸ் லீக் போட்டியின் பிரதான சுற்றுக்கு முன்னேறும்.