கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி. 6–வது தோல்வி + "||" + ISL Football: Chennai's F.C. 6th defeat

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி. 6–வது தோல்வி

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையின் எப்.சி. 6–வது தோல்வி
5–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் நேற்றிரவு ஜாம்ஷெட்பூரில் நடந்த 39–வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி, ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை எதிர்கொண்டது.

ஜாம்ஷெட்பூர், 

5–வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டியில் நேற்றிரவு ஜாம்ஷெட்பூரில் நடந்த 39–வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடுத்த ஜாம்ஷெட்பூர் அணி 3–1 என்ற கோல் கணக்கில் சென்னை அணிக்கு அதிர்ச்சி அளித்தது. பாப்லோ மோர்கடோ (14–வது நிமிடம்), கார்லஸ் கல்வோ (29–வது நிமிடம்), மரியோ ஆர்கியூஸ் (72–வது நிமிடம்) ஆகியோர் ஜாம்ஷெட்பூர் அணிக்காக கோல் போட்டனர். சென்னை அணி தரப்பில் ரபெல் அகஸ்டோ 68–வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் கோல் போட்டு ஆறுதல் அளித்தார். 8–வது லீக்கில் ஆடிய சென்னை அணிக்கு இது 6–வது தோல்வியாகும். இன்றைய ஆட்டத்தில் பெங்களூரு எப்.சி.–டெல்லி டைனமோஸ் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.