கால்பந்து

ஆசிய கோப்பை கால்பந்து: இந்திய அணி அறிவிப்பு + "||" + Asian Cup football Indian team announcement

ஆசிய கோப்பை கால்பந்து: இந்திய அணி அறிவிப்பு

ஆசிய கோப்பை கால்பந்து: இந்திய அணி அறிவிப்பு
ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் 17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 5-ந்தேதி முதல் பிப்ரவரி 1-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா, அல் அய்ன் ஆகிய இடங்களில் நடக்கிறது.
அபுதாபி,

இதில் பங்கேற்கும் 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியா, ஐக்கிய அரபு அமீகரம், தாய்லாந்து, பக்ரைன் ஆகிய அணிகள் ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கின்றன. இந்திய அணி தனது முதலாவது ஆட்டத்தில் ஜனவரி 6-ந்தேதி தாய்லாந்தை சந்திக்கிறது.


இந்த போட்டிக்கான இந்திய உத்தேச அணியில் இருந்து 23 பேர் கொண்ட இறுதிபட்டியலை பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டான்டைன் நேற்று அறிவித்தார். இந்திய அணி வீரர்கள் வருமாறு:-

கோல் கீப்பர்கள்: குர்பிரீத் சிங் சந்து, விஷால் கைத், அம்ரிந்தர்சிங்.

பின்களம்: பிரிதம் கோட்டால், சர்தாக் கோலு, சந்தேஷ் ஜின்கான், அனாஸ் எடதோடிகா, சலாம் ரஞ்சன் சிங், சுபாஷிஸ் போஸ், நாராயன் தாஸ்.

நடுகளம்: உதன்டா சிங், ஜாக்கிசாந்த் சிங், ஜெர்மன்பிரீத் சிங், பிரோனாய் ஹால்தர், அனிருத் தபா, வினித் ராய், ரோவ்லின் போர்ஜஸ், ஆஷிக் குருனியன், ஹாலிசரன் நார்ஜரி.

முன்களம் : சுமீத் பாசி, பல்வந்தர்சிங், சுனில்சேத்ரி, ஜெஜெ லால்பெகுலா.