கால்பந்து

இந்தோனேஷியாவுக்கு எதிரான கால்பந்து: இந்திய பெண்கள் அணி வெற்றி + "||" + Indian women's team win

இந்தோனேஷியாவுக்கு எதிரான கால்பந்து: இந்திய பெண்கள் அணி வெற்றி

இந்தோனேஷியாவுக்கு எதிரான கால்பந்து: இந்திய பெண்கள் அணி வெற்றி
இந்திய பெண்கள் கால்பந்து அணி, இந்தோனேஷியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு பெண்கள் அணியுடன் 2 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் விளையாடியது.
ஜகர்தா, 

இந்திய பெண்கள் கால்பந்து அணி, இந்தோனேஷியாவில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு பெண்கள் அணியுடன் 2 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் விளையாடியது. இதில் ஜகர்தாவில் நேற்று நடந்த 2-வது மற்றும் கடைசி போட்டியில் இந்திய அணி 2-0 என்ற கோல் கணக்கில் இந்தோனேஷியாவை வீழ்த்தியது. இந்திய அணியில் சஞ்சு, கிரேஸ் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இதன் மூலம் இந்த தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தனதாக்கியது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இருந்தது.