கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேற்றம் + "||" + ISL Football: Goa team 'knock-out' round progress

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேற்றம்

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேற்றம்
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கோவா அணி நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.
கோவா,

5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் கோவாவில் நேற்று இரவு நடந்த 80-வது லீக் ஆட்டத்தில் எப்.சி.கோவா-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் மோதின. தொடக்கம் முதலே இரு அணிகளும் தாக்குதல் ஆட்டத்தை தொடுத்தன. 22-வது நிமிடத்தில் கோவா அணியின் பெர்ரான் கொராமினாஸ் முதல் கோல் அடித்தார். 25-வது நிமிடத்தில் கோவா அணி வீரர் எடு பெடியா கோல் திணித்தார். முதல் பாதியில் கோவா அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 78-வது நிமிடத்தில் கோவா அணி வீரர் ஹீகோ கோல் அடித்தார். பதில் கோல் திருப்ப கேரளா அணியினர் எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் கோவா அணி 3-0 என்ற கோல் கணக்கில் கேரளா அணியை வீழ்த்தியது. 16-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி 9 வெற்றி, 4 டிரா, 3 தோல்வியுடன் 31 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்ததுடன் ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு 2-வது அணியாக முன்னேறியது. ஏற்கனவே பெங்களூரு எப்.சி. அணி ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு தகுதி பெற்று இருந்தது. 17-வது ஆட்டத்தில் ஆடிய கேரளா அணி சந்தித்த 7-வது தோல்வி இதுவாகும்.

நாளை (புதன்கிழமை) இரவு 7.30 மணிக்கு கவுகாத்தியில் நடைபெறும் 81-வது லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.(கவுகாத்தி)-எப்.சி.புனே சிட்டி அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. ஐ.எஸ்.எல். கால்பந்து: இறுதிப்போட்டியில் கோவா அணி
ஐ.எஸ்.எல். கால்பந்தின் இறுதிப்போட்டிக்கு கோவா அணி தகுதிபெற்றது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கவுகாத்தி அணியை வீழ்த்தி பெங்களூரு இறுதிப்போட்டிக்கு தகுதி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கவுகாத்தி அணியை வீழ்த்தி பெங்களூரு இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா அணி ஆறுதல் வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், கொல்கத்தா அணி ஆறுதல் வெற்றிபெற்றது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் ‘டிரா’
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், சென்னை-ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கிடையேயான ஆட்டம் டிரா ஆனது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவாவிடம் வீழ்ந்தது கொல்கத்தா
10 அணிகள் இடையிலான 5-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.