கால்பந்து

ஆசிய கோப்பை கிளப் கால்பந்து: சென்னையின் எப்.சி. முதல் வெற்றி + "||" + Asian Cup Club Football: Chennai's F.C. First victory

ஆசிய கோப்பை கிளப் கால்பந்து: சென்னையின் எப்.சி. முதல் வெற்றி

ஆசிய கோப்பை கிளப் கால்பந்து: சென்னையின் எப்.சி. முதல் வெற்றி
ஆசிய கோப்பை கிளப் கால்பந்து போட்டியின் தென் மண்டல குரூப் சுற்று பிரிவில் மொத்தம் 36 அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஆமதாபாத், 

ஆசிய கோப்பை கிளப் கால்பந்து போட்டியின் தென் மண்டல குரூப் சுற்று பிரிவில் மொத்தம் 36 அணிகள் இடம் பெற்றுள்ளன. அவை 9 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. இதில் ஐ.எஸ்.எல். போட்டியில் 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணியான சென்னையின் எப்.சி. ‘இ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. தனது முதல் ஆட்டத்தில் மினர்வா பஞ்சாப்புடன் டிரா கண்ட சென்னை அணி நேற்று மனங் மார்ஷ்யாங்டி கிளப்பை (நேபாளம் அணி) ஆமதாபாத்தில் சந்தித்தது. 63 சதவீதம் பந்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சென்னை அணி 2–0 என்ற கோல் கணக்கில் மார்ஷ்யாங்டியை வீழ்த்தி குரூப் பிரிவில் தனது முதலாவது வெற்றியை ருசித்தது. கிறிஸ் ஹெர்ட் (51–வது நிமிடம்), கேப்டன் மெயில்சன் ஆல்வ்ஸ் (53–வது நிமிடம்) தலா ஒரு கோல் போட்டனர். சென்னையின் எப்.சி. அணி அடுத்து அபாஹானி டாக்காவுடன் (வங்காளதேசம்) வருகிற 30–ந்தேதி மோதுகிறது.