கால்பந்து

உருகுவே கால்பந்து அணி வீரர் சுவாரஸ்க்கு ஆபரே‌ஷன் + "||" + Uruguay football team player Suarez Operation

உருகுவே கால்பந்து அணி வீரர் சுவாரஸ்க்கு ஆபரே‌ஷன்

உருகுவே கால்பந்து அணி வீரர் சுவாரஸ்க்கு ஆபரே‌ஷன்
உருகுவே கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லூயிஸ் சுவாரஸ் பார்சிலோனா (ஸ்பெயின்) கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்.

மாட்ரிட், 

உருகுவே கால்பந்து அணியின் நட்சத்திர வீரரான லூயிஸ் சுவாரஸ் பார்சிலோனா (ஸ்பெயின்) கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரைஇறுதியில் பார்சிலோனா அணி, லிவர்பூல் அணியிடம் தோல்வி கண்டு வெளியேறியது. இந்த நிலையில் பார்சிலோனா கிளப் வீரரான லூயிஸ் சுவாரஸ் காயத்தில் சிக்கி இருக்கிறார். வலது முழங்காலில் ஏற்பட்ட காயத்துக்கு அவருக்கு ஆபரே‌ஷன் செய்யப்படுகிறது. ஆபரே‌ஷன் முடிந்து சுவாரஸ் எப்போது? களம் திரும்புவார் என்பது தெரியவில்லை. இந்த சீசனில் சுவாரஸ் விளையாட முடியாது என்று தெரிகிறது. சுவாரஸ் இந்த சீசனில் கிளப் போட்டியில் 25 கோல்கள் அடித்து இருந்தார்.