கால்பந்து

ஆசிய கோப்பை கால்பந்து:சென்னையின் எப்.சி. அணி தோல்வி + "||" + Asian Cup football

ஆசிய கோப்பை கால்பந்து:சென்னையின் எப்.சி. அணி தோல்வி

ஆசிய கோப்பை கால்பந்து:சென்னையின் எப்.சி. அணி தோல்வி
ஆசிய கோப்பை கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணி தோல்வி அடைந்தது.
டாக்கா,

ஆசிய கோப்பை கால்பந்து போட்டிக்கான தென் மண்டல குரூப் (இ பிரிவு) சுற்றில் வங்காளதேச தலைநகர் டாக்காவில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-அபாகானி லிமிடெட் டாக்கா (வங்காளதேசம்) அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. அணி 2-3 என்ற கோல் கணக்கில் அபாகானி லிமிடெட் டாக்கா அணியிடம் தோல்வி கண்டது. வங்காளதேச அணியில் கெர்வென்ஸ் பெல்போர்ட் 64-வது நிமிடத்திலும், மாசிக் சைஹானி 69-வது நிமிடத்திலும், மாமனுல் இஸ்லாம் 88-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். சென்னையின் எப்.சி. அணியில் வினீத் 6-வது நிமிடத்திலும், ஐசக் வன்மால்சாவ் 74-வது நிமிடத்திலும் கோல் அடித்தார்கள். சென்னையின் எப்.சி. அணி தனது அடுத்த ஆட்டத்தில் மினர்வா பஞ்சாப் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம் கவுகாத்தியில் ஜூன் 19-ந் தேதி நடக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆசிய கோப்பை கால்பந்து: அமீரகத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது கத்தார் அணி மைதானத்திற்குள் ரசிகர்கள் செருப்பு வீச்சு
17-வது ஆசிய கோப்பை கால்பந்து தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் அபுதாபியில் நேற்று நடந்த அரைஇறுதியில் கத்தார் அணி, ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டது.
2. ஆசிய கோப்பை கால்பந்து: இந்திய அணி அறிவிப்பு
ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் 17-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி அடுத்த மாதம் (ஜனவரி) 5-ந்தேதி முதல் பிப்ரவரி 1-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா, அல் அய்ன் ஆகிய இடங்களில் நடக்கிறது.