கால்பந்து

இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இகோர் ஸ்டிமாக் நியமனம் + "||" + Igor Stemmak is appointed as coach of Indian football team

இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இகோர் ஸ்டிமாக் நியமனம்

இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இகோர் ஸ்டிமாக் நியமனம்
இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக குரோஷியாவை சேர்ந்த இகோர் ஸ்டிமாக் நியமனம் செய்யப்பட்டார்.
புதுடெல்லி,

இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் கான்ஸ்டன்டைன் (இங்கிலாந்து) கடந்த ஜனவரி மாதத்தில் நடந்த ஆசிய கோப்பை கால்பந்து போட்டியுடன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து புதிய பயிற்சியாளருக்கான நேர்காணலை நடத்திய அகில இந்திய கால்பந்து சம்மேளன டெக்னிக்கல் கமிட்டி குரோஷியாவை சேர்ந்த முன்னாள் வீரரான இகோர் ஸ்டிமாக்கை பயிற்சியாளராக தேர்வு செய்து செயற்குழுவுக்கு பரிந்துரை செய்தது. இதற்கு செயற்குழு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து புதிய பயிற்சியாளராக இகோர் ஸ்டிமாக் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் 51 வயதான இகோர் ஸ்டிமாக் 1998-ம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டியில் 3-வது இடம் பிடித்த குரோஷியா அணியில் இடம் பெற்று இருந்தார். குரோஷியா அணிக்காக 53 சர்வதேச போட்டிகளில் பின்கள வீரராக விளையாடி இருக்கும் அவர் குரோஷியா அணியின் பயிற்சியாளராகவும் இருந்து இருக்கிறார்.

அடுத்த மாதம் (ஜூன்) தாய்லாந்தில் நடைபெறும் கிங்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளராக இகோர் ஸ்டிமாக் தனது பணியை தொடங்க இருக்கிறார். இகோர் ஸ்டிமாக்கின் பதவி காலம் 2 ஆண்டாகும். ‘இகோர் ஸ்டிமாக் பயிற்சியாளர் பதவிக்கு சரியான தேர்வாகும். அவரது அனுபவம் மற்றும் வழிகாட்டுதலின் மூலம் இந்திய கால்பந்து அணி உயரிய சக்தி கொண்டதாக உருவெடுக்கும்’ என்று இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் பிரபுல் பட்டேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.