கால்பந்து

கோபா அமெரிக்கா கால்பந்து: பிரேசில் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நெய்மார் நீக்கம் + "||" + Brazil team Neymar's removal from captaincy

கோபா அமெரிக்கா கால்பந்து: பிரேசில் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நெய்மார் நீக்கம்

கோபா அமெரிக்கா கால்பந்து: பிரேசில் அணியின் கேப்டன் பதவியில் இருந்து நெய்மார் நீக்கம்
12 அணிகள் பங்கேற்கும் 46–வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ஜூன் 14–ந் தேதி முதல் ஜூலை 7–ந் தேதி வரை நடக்கிறது.

ரியோடி ஜெனீரோ, 

12 அணிகள் பங்கேற்கும் 46–வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ஜூன் 14–ந் தேதி முதல் ஜூலை 7–ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் பிரேசில் கால்பந்து அணியின் கேப்டனாக சீனியர் பின்கள வீரர் டேனி ஆல்வ்ஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கேப்டன் பதவியில் இருந்து நட்சத்திர வீரர் நெய்மார் நீக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ரசிகரை கன்னத்தில் அறைந்த சர்ச்சையில் சிக்கிய நெய்மாருக்கு 3 போட்டியில் விளையாட பிரான்ஸ் கால்பந்து பெடரே‌ஷன் தடை விதித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.