கோபா அமெரிக்கா கால்பந்து: சிலி அணி அபார வெற்றி


கோபா அமெரிக்கா கால்பந்து: சிலி அணி அபார வெற்றி
x
தினத்தந்தி 18 Jun 2019 9:00 PM GMT (Updated: 18 Jun 2019 8:48 PM GMT)

46–வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

சாவ் பாவ்லோ, 

46–வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த 10 அணிகளோடு ஆசியாவை சேர்ந்த கத்தார், ஜப்பான் அணிகள் சிறப்பு அழைப்பின் பேரில் கலந்து கொண்டுள்ளன. 12 அணிகளும் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ‘சி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனான சிலி அணி, ஜப்பானை எதிர்கொண்டது. அனுபவம் வாய்ந்த வீரர்களை அதிகம் கொண்ட சிலி அணியின் தாக்குதல் ஆட்டத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் இளம் வீரர்களை உள்ளடக்கிய ஜப்பான் அணி தடுமாறியது. முடிவில் சிலி அணி 4–0 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் தொடங்கியது. சிலி அணியில் எரிக் பல்கர் 41–வது நிமிடத்திலும், எடார்டோ வர்காஸ் 54–வது மற்றும் 83–வது நிமிடத்திலும், அலெக்சிஸ் சாஞ்சஸ் 82–வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். 2 கோல் அடித்த எடுர்டோ வார்கஸ் ஒட்டுமொத்த கோபா அமெரிக்கா போட்டியில் இதுவரை 12 கோல்கள் அடித்தார். இதன் மூலம் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அதிக கோல்கள் அடித்த சிலி வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார்.


Next Story