கால்பந்து

கோபா அமெரிக்கா கால்பந்து:கால்இறுதிக்கு முன்னேறியது சிலி + "||" + Copa America Football: Chile advanced to quarter-finals

கோபா அமெரிக்கா கால்பந்து:கால்இறுதிக்கு முன்னேறியது சிலி

கோபா அமெரிக்கா கால்பந்து:கால்இறுதிக்கு முன்னேறியது சிலி
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் ஈகுவடாரை வீழ்த்தி சிலி அணி கால்இறுதிக்கு முன்னேறியது.
சால்வடோர், 

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் ஈகுவடாரை வீழ்த்தி சிலி அணி கால்இறுதிக்கு முன்னேறியது.

கால்பந்து போட்டி

46-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடர் பிரேசிலின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 12 அணிகள் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

இந்திய நேரப்படி நேற்று அதிகாலை சால்வடோரில் நடந்த 12-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான சிலி அணி, ஈகுவடாரை (சி பிரிவு) எதிர்கொண்டது. அனுபவம் வாய்ந்த சிலி அணி 8-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்தது. அந்த அணியின் ஜோஸ் பியன்ஜாலிடா சற்று தூரத்தில் இருந்து உதைத்த பந்து கம்பத்தில் பட்டு வலைக்குள் நுழைந்தது.

பதில் கோல் திருப்ப போராடிய ஈகுவடாருக்கு 26-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கனிந்தது. ஈகுவடார் வீரர் மென்டெஸ் கோல் அடிக்க முயற்சித்த சமயத்தில், சிலி கோல் கீப்பர் கேப்ரியல் அரைஸ் பாய்ந்து விழுந்து பந்தை தடுத்தார். அப்போது மென்டெஸ் நிலை தடுமாறி பல்டி அடித்து கீழே விழுந்தார். இதனால் வழங்கப்பட்ட பெனால்டியை ஈகுவடார் வீரர் வலென்சியா கோலாக்கினார். 39-வது நிமிடத்திலும் கேப்ரியல் அரைஸ் இதே போன்ற தவறை செய்தார். அப்போது மஞ்சள் அட்டை எச்சரிக்கையுடன் தப்பினார்.

சிலி வெற்றி

முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனதால், பிற்பகுதியில் சிலி வீரர்கள் மேலும் ஆக்ரோஷமாக ஆடினார்கள். அந்த அணியின் அலெக்சிஸ் சாஞ்சஸ் 51-வது நிமிடத்தில் சக வீரர் தட்டிக்கொடுத்த பந்தை அருமையாக வலைக்குள் அனுப்பி அசத்தினார்.

இதன் பின்னர் 89-வது நிமிடத்தில் ‘பவுல்’ செய்த சிலி வீரர் கேப்ரியல் ஆச்சிலியர் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். அது கடைசி கட்டம் என்பதால் சிலிக்கு பாதிப்பு இல்லை.

முடிவில் சிலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை தோற்கடித்தது. ஏற்கனவே தனது பிரிவில் ஜப்பானை வீழ்த்தி இருந்த சிலி அணி 2-வது வெற்றியின் மூலம் கால்இறுதிக்கு முன்னேறியது.

வெற்றிக்குரிய கோல் அடித்த சிலி வீரர் அலெக்சிஸ் சாஞ்சஸ் கூறுகையில், ‘ஆட்டத்தின் போது, கணுக்காலில் ஏற்பட்ட காயம் அதிகமானது. இதனால் கணுக்காலில் ‘பேண்டேஜ்’ போட்டுக் கொண்டு, வலியுடனேயே தொடர்ந்து விளையாடினேன். காயம் பயப்படும்படி இருக்காது என்று நம்புகிறேன்’ என்றார்.