கால்பந்து

14 நாடுகள் பங்கேற்கும் சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து போட்டி சென்னையில் நடக்கிறது + "||" + Special Olympics International Football Tournament

14 நாடுகள் பங்கேற்கும் சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து போட்டி சென்னையில் நடக்கிறது

14 நாடுகள் பங்கேற்கும் சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து போட்டி சென்னையில் நடக்கிறது
சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் வருகிற 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை நடக்கிறது.
சென்னை, 

சிறப்பு ஒலிம்பிக் சர்வதேச கால்பந்து போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் வருகிற 3-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை நடக்கிறது. மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரியா, இந்தோனேஷியா, எகிப்து, ரஷியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 12 நாடுகள் பங்கேற்கின்றன. ஆண்கள் பிரிவில் 12 அணிகளும், பெண்கள் பிரிவில் 8 அணிகளும் கலந்து கொள்கின்றன.

இந்திய சிறப்பு ஒலிம்பிக், ஆசிய பசிபிக் சிறப்பு ஒலிம்பிக், அரிமா சங்கம் ஆகியவை இணைந்து இந்த போட்டியை நடத்துகிறது. ‘மருத்துவத்தை விட இது மாதிரியான விளையாட்டுகள் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கு சிறப்பானதாக அமையும்’ என்று ஆசிய பசிபிக் சிறப்பு ஒலிம்பிக் சீனியர் மானேஜர் நாகராஜன் தெரிவித்தார்.