கால்பந்து

ஐரோப்பிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று: நெதர்லாந்து அணியிடம் ஜெர்மனி அதிர்ச்சி தோல்வி + "||" + European Cup Football Qualifier: Germany shock defeat to Netherlands

ஐரோப்பிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று: நெதர்லாந்து அணியிடம் ஜெர்மனி அதிர்ச்சி தோல்வி

ஐரோப்பிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று: நெதர்லாந்து அணியிடம் ஜெர்மனி அதிர்ச்சி தோல்வி
ஐரோப்பிய கோப்பை கால்பந்து தகுதி சுற்று போட்டியில், நெதர்லாந்து அணியிடம் ஜெர்மனி அதிர்ச்சி தோல்வியடைந்தது.
ஹம்பர்க்,

16-வது ஐரோப்பிய (யூரோ) கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி அடுத்த ஆண்டு (2020) ஜூன் 12-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டம் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 55 அணிகள் லீக் சுற்றில் மோதி வருகின்றன. ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க்கில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் உலக சாம்பியன் ஜெர்மனி அணி, நெதர்லாந்தை எதிர்கொண்டது. இதில் முதல் பாதியில் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்த ஜெர்மனி அணி, அதனை கடைசி வரை தக்க வைத்து கொள்ள முடியவில்லை. பிற்பாதியில் அபாரமாக செயல்பட்ட நெதர்லாந்து அணி அடுத்தடுத்து கோல்கள் போட்டது. இதில் ஒரு சுய கோலும் அடங்கும். பரபரப்பான இந்த ஆட்டத்தின் முடிவில் நெதர்லாந்து 4-2 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது. கடந்த 17 ஆண்டுகளில் ஜெர்மனி மண்ணில் நெதர்லாந்து அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.