கால்பந்து

லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி வெற்றி + "||" + La Liga Football: Real Madrid team win

லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி வெற்றி

லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி வெற்றி
லா லிகா கால்பந்து போட்டியில், ரியல் மாட்ரிட் அணி வெற்றிபெற்றது.
மாட்ரிட்,

லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயின் நாட்டில் நடந்து வருகிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் மாட்ரிட்டில் நேற்று நடந்த ஆட்டம் ஒன்றில் 33 முறை சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி, செவில்லாவை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த போட்டியில் பந்து அதிக நேரம் செவில்லா அணியின் கட்டுப்பாட்டில் இருந்ததுடன், அந்த அணியினர் இலக்கை நோக்கி அதிக முறை ஷாட் அடித்தனர். ஆனால் அதனை ரியல் மாட்ரிட் அணியின் பின்கள வீரர்கள் சிறப்பாக தடுத்து நிறுத்தினார்கள். 64-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் அணி வீரர் கரிம் பென்ஜிமா கோல் அடித்தார். செவில்லா அணி பதில் கோல் திருப்ப எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. முடிவில் ரியல் மாட்ரிட் 1-0 என்ற கோல் கணக்கில் செவில்லா அணியை வீழ்த்தியது. 5-வது ஆட்டத்தில் ஆடிய ரியல் மாட்ரிட் அணி 3 வெற்றி, 2 டிராவுடன் 11 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. லா லிகா கால்பந்து: பார்சிலோனா அணி 10-வது வெற்றி
லா லிகா கால்பந்து போட்டியில், பார்சிலோனா அணி தனது 10-வது வெற்றியை பதிவு செய்தது.
2. லா லிகா கால்பந்து: பார்சிலோனா அணி வெற்றி
லா லிகா கால்பந்து போட்டியில், பார்சிலோனா அணி வெற்றிபெற்றது.