ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணியை பந்தாடியது கொல்கத்தா


ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத் அணியை பந்தாடியது கொல்கத்தா
x
தினத்தந்தி 25 Oct 2019 9:30 PM GMT (Updated: 25 Oct 2019 8:57 PM GMT)

கொல்கத்தாவில் அரங்கேறிய 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி, ஐதராபாத் எப்.சி.யை எதிர்கொண்டது.

கொல்கத்தா, 

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு கொல்கத்தாவில் அரங்கேறிய 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி, ஐதராபாத் எப்.சி.யை எதிர்கொண்டது.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கொல்கத்தா அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஐதராபாத்தை ஊதித்தள்ளியது. டேவிட் வில்லியம்ஸ், எடு கார்சியா தலா 2 கோலும், ராய் கிருஷ்ணா ஒரு கோலும் அடித்தனர்.

கவுகாத்தியில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்- ஒடிசா எப்.சி. அணிகள் மோதுகின்றன.

Next Story