கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணியின் ஆதிக்கம் நீடிக்குமா? பெங்களூருவுடன் இன்று மோதல் + "||" + ISL Football In Bengaluru today match

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணியின் ஆதிக்கம் நீடிக்குமா? பெங்களூருவுடன் இன்று மோதல்

ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணியின் ஆதிக்கம் நீடிக்குமா? பெங்களூருவுடன் இன்று மோதல்
6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
பெங்களூரு,

பெங்களூருவில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 50-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி. அணி, எப்.சி.கோவா அணியை எதிர்கொள்கிறது. எப்.சி.கோவா அணி 10 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 3 டிரா, ஒரு தோல்வியுடன் 21 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. அந்த அணி தனது கடைசி 5 ஆட்டங்களில் தோல்வியை (ஒரு டிரா, 4 வெற்றி) சந்தித்ததில்லை. பெங்களூரு எப்.சி. அணி 10 ஆட்டத்தில் விளையாடி 4 வெற்றி, 4 டிரா, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் இருக்கிறது. இவ்விரு அணிகள் மோதிய முதலாவது லீக் ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. கோவா அணி தனது ஆதிக்கத்தை தொடர முயற்சிக்கும்.


அதேநேரத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னேற்றம் காண பெங்களூரு அணி போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.