கால்பந்து

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை அணி + "||" + ISL Football: Hyderabad beat Chennai team

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை அணி

ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை அணி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில், ஐதராபாத்தை 3-1 என்ற கோல் கணக்கில் சென்னை அணி வீழ்த்தியது.
ஐதராபாத்,

6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு ஐதராபாத்தில் அரங்கேறிய 56-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, ஐதராபாத் எப்.சி.யுடன் மோதியது. பந்து அதிகமான நேரம் ஐதராபாத் (56 சதவீதம்) வசம் சுற்றிக் கொண்டிருந்தாலும் ஷாட் அடிப்பதில் சென்னை வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். 40-வது நிமிடத்தில் ரபெல் கிரிவெல்லாரோவும், 43, 65-வது நிமிடங்களில் வல்ஸ்கிஸ்சும் கோல் அடித்து சென்னை அணிக்கு வலுவான முன்னிலை ஏற்படுத்தி தந்தனர். 88-வது நிமிடத்தில் ஐதராபாத் வீரர் மார்செலினோ ஒரு கோல் அடித்து ஆறுதல் அளித்தார். முடிவில் சென்னை அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத்தை வீழ்த்தி 3-வது வெற்றியை பெற்றது. ஐதராபாத் அணிக்கு இது 9-வது தோல்வியாகும்.


இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மும்பை சிட்டி-ஒடிசா எப்.சி. அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. 20 ஓவர் கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான்
20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது.
2. ஐ.எஸ்.எல். கால்பந்து: கோவா அணி 8வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில் கேரளா அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோவா அணி வெற்றிபெற்றது.
3. ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 5-வது வெற்றி
10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த 65-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணி, ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை சந்தித்தது.
4. ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு 7-வது வெற்றி
ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் ஒடிசா அணிக்கு எதிரான ஆட்டத்தில், பெங்களூரு அணி தனது 7-வது வெற்றியை பதிவு செய்தது.
5. ஐ.எஸ்.எல். கால்பந்து: நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி. - ஒடிசா எப்.சி. அணிகள் இன்று மோதல்
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரில், 64-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பெங்களூரு எப்.சி. , ஒடிசா எப்.சி. அணியை எதிர்கொள்கிறது.