ஐ.எஸ்.எல் கால்பந்து: கொல்கத்தா அணி வெற்றி


ஐ.எஸ்.எல் கால்பந்து: கொல்கத்தா அணி வெற்றி
x
தினத்தந்தி 2 Feb 2020 11:11 PM GMT (Updated: 2 Feb 2020 11:11 PM GMT)

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரில், ஜாம்ஷெட்பூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா அணி வெற்றிபெற்றது.


* ஒவ்வொரு மாதமும் நிறைய போட்டிகளில் விளையாடுவதால் உடல் அளவில் கடினமாக இருப்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் லோகேஷ் ராகுல் கூறியுள்ளார்.

* இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு ஜாம்ஷெட்பூரில் நடந்த 73-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் எப்.சி.யை வீழ்த்தி 9-வது வெற்றியுடன் பட்டியலில் முதலிடத்தை எட்டியது.

* சென்னையில் நடந்து வரும் 23 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டம் ஒன்றில் ராஜஸ்தான் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் தமிழக அணியை தோற்கடித்தது. இதில் ராஜஸ்தான் நிர்ணயித்த 186 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தமிழக அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 159 ரன்களே எடுக்க முடிந்தது.


Next Story