கால்பந்து

பெண்கள் கால்பந்து: மதுரை பல்கலைக்கழக அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் + "||" + Women's Football: Madurai University team to advance to final

பெண்கள் கால்பந்து: மதுரை பல்கலைக்கழக அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

பெண்கள் கால்பந்து: மதுரை பல்கலைக்கழக அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
பெண்கள் கால்பந்து போட்டியில், மதுரை பல்கலைக்கழக அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
சென்னை,

முதலாவது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேசுவரம் மற்றும் கட்டாக்கில் நடந்து வருகிறது. இதில் கால்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் அண்ணாமலை பல்கலைக்கழக அணி (சிதம்பரம்) 2-1 என்ற கோல் கணக் கில் குருநானக் தேவ் பல்கலைக்கழகத்தை (பஞ்சாப்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மற்றொரு அரைஇறுதியில் மதுரை காமராஜ் பல் கலைக்கழக அணி 1-0 என்ற கோல் கணக் கில் கோவா பல்கலைக்கழகத்தை விரட்டியடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

ஆசிரியரின் தேர்வுகள்...