‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக்: வருமான வரி அணி வெற்றி


‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக்: வருமான வரி அணி வெற்றி
x
தினத்தந்தி 11 March 2020 11:04 PM GMT (Updated: 11 March 2020 11:04 PM GMT)

‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் போடிட்யில், வருமான வரி அணி வெற்றிபெற்றது.

சென்னை,

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில், டாக்டர் ரெலா இன்ஸ்டிடியூட் மற்றும் மருத்துவ மையம், ஆச்சி மசாலா நிறுவனம் ஆகியவை ஆதரவுடன் ‘ஏ’ டிவிசன் கைப்பந்து லீக் போட்டி அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் 4-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் சுங்க இலாகா அணி 22-25, 25-17, 25-15, 25-15 என்ற செட் கணக்கில் செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி அணியை வீழ்த்தியது.

மற்றொரு ஆட்டத்தில் வருமான வரி அணி 25-19, 25-16, 17-25, 25-12 என்ற செட் கணக்கில் சேப்பாக் பிரண்ட்ஸ் அணியை தோற்கடித்தது.

இன்று நடைபெறும் ஆட்டங்களில் சுங்க இலாகா-எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் (மாலை 4.30 மணி), வருமான வரி-செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி (மாலை 6 மணி) அணிகள் சந்திக்கின்றன.


Next Story