கால்பந்து

நெதர்லாந்து பயிற்சியாளர் ரொனால்ட் கோமன் மருத்துவமனையில் அனுமதி + "||" + Dutch coach Ronald Koeman admitted to hospital with heart problem - reports

நெதர்லாந்து பயிற்சியாளர் ரொனால்ட் கோமன் மருத்துவமனையில் அனுமதி

நெதர்லாந்து பயிற்சியாளர் ரொனால்ட் கோமன் மருத்துவமனையில் அனுமதி
டச்சு தேசிய பயிற்சியாளர் ரொனால்ட் கோமனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டச்சு,

டச்சு தேசிய பயிற்சியாளர் ரொனால்ட் கோமன் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் இந்தநிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டத்தை அடுத்து அவர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் இதய பிரச்சினை தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

2018 முதல் டச்சு அணியின் பயிற்சியாளராக உள்ள கோமன் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

"இது ஒரு அதிர்ச்சி" என்று டச்சு கால்பந்து கூட்டமைப்பு டுவிட் செய்துள்ளது. சீக்கிரம் மீண்டு வர வேண்டும், பயிற்சியாளர் என அதில் பதிவிடப்பட்டுள்ளது.

கோமன் வெறும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக டச்சு பயிற்சியாளராக இருந்து வருகிறார்.