கால்பந்து

சீரி ஏ லீக் போட்டி ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கும் + "||" + Serie A season finish pushed back to August 20

சீரி ஏ லீக் போட்டி ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கும்

சீரி ஏ லீக் போட்டி ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கும்
சீரி ஏ லீக் போட்டி ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கும் என இத்தாலியின் கால்பந்து கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.
மிலன்

சீரி ஏ சீசன் மீண்டும் தொடங்க முடியுமா என்று மே 28 அன்று இத்தாலிய அரசாங்கம் முடிவு செய்யும் என்று விளையாட்டு அமைச்சர் வின்சென்சோ ஸ்படா போரா செவ்வாயன்று கூறி உள்ளார்.அணிகள் உடனடியாக முழு குழு பயிற்சியையும் தொடங்கலாம் என்று அறிவித்தார்.

மார்ச் 9 முதல்  இத்தாலிய கால்பந்து லீக் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டு ஜூன் நடுப்பகுதியில் தொடங்கும் என்று நம்பப்படுகிறது, ஆனால் இன்னும் அரசாங்க ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

இது குறித்து பேட்டி அளித்த  விளையாட்டு அமைச்சர் வின்சென்சோ ஸ்படா போரா சாம்பியன்ஷிப்பை மறுதொடக்கம் செய்வது கொரோனா தொற்று எவ்வாறுஇருக்கிறது என்பதைப் பொறுத்தது. சீரி ஏ கிளப்புகள் ஜூன் 13 அன்று மறுதொடக்கம் செய்ய இந்த மாத தொடக்கத்தில் வாக்களித்தன, ஆனால் பின்னர் விளையாட்டு நிகழ்வுகளுக்கான தடையை ஜூன் 14 வரை அரசாங்கம் நீட்டித்துள்ளது.

இத்தாலிய கால்பந்து கூட்டமைப்பு மற்றும் சீரி ஏ லீக் தலைவர்களை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளேன் எ.ன கூறினார்.

 சீரி ஏ லீக் போட்டி ஆகஸ்ட் 20 ஆம் தேதி தொடங்கும்  என  புதிய தேதியை நிர்ணயித்தது இத்தாலியின் கால்பந்து கூட்டமைப்பு (எஃப்ஐஜிசி)

எஃப்.ஐ.ஜி.சியின் ஃபெடரல் கவுன்சிலின் ஒரு கூட்டம் இத்தாலிய கால்பந்தின் சிறந்த லீக்குகள் மீண்டும் நடைபெற வேண்டும் வேண்டும் என்ற விருப்பத்தை வலியுறுத்தியது, ஆனால் அனைத்து அமெச்சூர் போட்டிகளும் நிறுத்தப்படும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. இத்தாலியில் கருப்பின வாலிபர் அடித்துக்கொலை-மக்கள் கொந்தளிப்பு
அமெரிக்காவில் கடந்த மே மாதம் ஜார்ஜ் பிளாய்ட் என்ற கருப்பின வாலிபர் வெள்ளை இனத்தைச் சேர்ந்த போலீஸ் அதிகாரியால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
2. கொரோனா வைரஸ் தானே பலவீனமடைந்து வருகிறதா...? ஆராய்ச்சியாளர்கள் இடையே கடும் விவாதம்...
கொரோனா வைரஸ் தன்னை பலவீனப்படுத்தி முடிவுக்கு வந்துவிடுமா என்பது குறித்த விவாதம் எழுந்து உள்ளது.
3. 2 மாதங்களுக்கு பிறகு இத்தாலியில் பயணத் தடை நீக்கம்
2 மாதங்களுக்கு பிறகு இத்தாலியில் பயணத் தடை நீக்கப்படுள்ளது.
4. கொரோனா பாதிப்பில் இத்தாலி, இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளியது ரஷியா
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் 5-வது இடத்தில் இருந்த ரஷியா, நேற்று இத்தாலி மற்றும் இங்கிலாந்தை பின்னுக்கு தள்ளி 3-வது இடத்துக்கு நகர்ந்தது.
5. கொரோனா பாதிப்புகளில் இத்தாலியை பின்னுக்கு தள்ளிய இங்கிலாந்து
கொரோனா பாதித்த ஐரோப்பிய நாடுகளில், இத்தாலியை பின்னுக்கு தள்ளி இங்கிலாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது.

ஆசிரியரின் தேர்வுகள்...