கால்பந்து

ரொனால்டோ புதிய சாதனை + "||" + Ronaldo's new record

ரொனால்டோ புதிய சாதனை

ரொனால்டோ புதிய சாதனை
50 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை போர்ச்சுகலை சேர்ந்த ரொனால்டோ படைத்தார்.
மிலன்,

இத்தாலியில் நடந்து வரும் சீரி ஏ கிளப் கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய ஒரு லீக் ஆட்டத்தில் யுவென்டஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் லாஜியோவை வீழ்த்தியது. யுவென்டஸ் அணியில் இரண்டு கோல்களையும் 51 மற்றும் 54-வது நிமிடங்களில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்தார். இதுவரை 34 ஆட்டங்களில் ஆடியுள்ள யுவென்டஸ் அணி 25 வெற்றி, 5 டிரா,4 தோல்வி என்று 80 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.


சீரி ஏ போட்டியில் ரொனால்டோ ஒட்டுமொத்தமாக இதுவரை 51 கோல்கள் (61 ஆட்டம்) அடித்துள்ளார். இதன் மூலம் சீரி ஏ, லா லிகா, இங்கிலாந்து பிரிமீயர் லீக் ஆகிய மூன்று போட்டிகளில் குறைந்தது 50 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை போர்ச்சுகலை சேர்ந்த ரொனால்டோ படைத்தார்.