கால்பந்து

பார்சிலோனா கிளப்பை விட்டு விலகினார், சுவாரஸ் + "||" + Barcelona left the club, Suarez

பார்சிலோனா கிளப்பை விட்டு விலகினார், சுவாரஸ்

பார்சிலோனா கிளப்பை விட்டு விலகினார், சுவாரஸ்
உருகுவே நாட்டின் பிரபல கால்பந்து வீரர் லுயிஸ் சுவாரஸ், ஸ்பெயினைச் சேர்ந்த பார்சிலோனா கிளப்புக்காக விளையாடி வந்தார். அ
பார்சிலோனா,

உருகுவே நாட்டின் பிரபல கால்பந்து வீரர் லுயிஸ் சுவாரஸ், ஸ்பெயினைச் சேர்ந்த பார்சிலோனா கிளப்புக்காக விளையாடி வந்தார். அவரது ஒப்பந்த காலம் மேலும் ஓராண்டு இருந்த நிலையில் புதிய பயிற்சியாளர் ரொனால்டு கோமனுக்கு அவரை தக்கவைக்க விருப்பம் இல்லை.


இந்த நிலையில் பார்சிலோனா கிளப்பை விட்டு விலகியுள்ள சுவாரஸ் ஸ்பெயினில் உள்ள மற்றொரு கிளப்பான அட்லெட்டிகோ மாட்ரிட் அணிக்காக விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். அவரை தங்கள் அணிக்கு மாற்றுவதற்கு அட்லெட்டிகோ மாட்ரிட் நிர்வாகம் போனசாக ரூ.51 கோடியை பார்சிலோனா கிளப்புக்கு வழங்க சம்மதித்துள்ளது. 33 வயதான சுவாரஸ் பார்சிலோனா அணிக்காக 6 ஆண்டுகள் விளையாடி 198 கோல்கள் அடித்திருப்பதும், 13 பட்டங்கள் வெல்ல உறுதுணையாக இருந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.