உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: வெற்றியுடன் தொடங்கியது அர்ஜென்டினா


உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: வெற்றியுடன் தொடங்கியது அர்ஜென்டினா
x
தினத்தந்தி 9 Oct 2020 10:40 PM GMT (Updated: 9 Oct 2020 10:40 PM GMT)

உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தாரில் நடக்கிறது.

பியூனஸ்அயர்ஸ்,

உலக கோப்பை கால்பந்து போட்டி 2022-ம் ஆண்டு கத்தாரில் நடக்கிறது. கொரோனா அச்சத்தால் தடைப்பட்டிருந்த இதற்கான தகுதி சுற்று போட்டிகள் மீண்டும் தொடங்கி உள்ளன. தென்அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.

முன்னாள் உலக சாம்பியனான அர்ஜென்டினா அணி தனது முதலாவது ஆட்டத்தில் சொந்த மண்ணில் ஈகுவடாரை நேற்று முன்தினம் எதிர்கொண்டது. ரசிகர்கள் இன்றி நடந்த இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா 1-0 என்ற கோல் கணக்கில் ஈகுவடாரை வீழ்த்தியது. வெற்றிக்குரிய கோலை 13-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் கேப்டன் லயோனல் மெஸ்சி அடித்தார். இது மெஸ்சியின் 71-வது சர்வதேச கோலாகும். அர்ஜென்டினா தனது அடுத்த ஆட்டத்தில் பொலிவியாவை 13-ந்தேதி எதிர்கொள்கிறது. மற்றொரு ஆட்டத்தில் உருகுவே 2-1 என்ற கோல் கணக்கில் சிலியை வீழ்த்தியது. பராகுவே- பெரு இடையிலான இன்னொரு ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

Next Story