கால்பந்து

லா லிகா கால்பந்து: பார்சிலோனா, ரியல்மாட்ரிட் அணிகள் அதிர்ச்சி தோல்வி + "||" + La Liga: Barcelona, Real Madrid suffer shock defeats ahead of next week’s El Clasico showdown

லா லிகா கால்பந்து: பார்சிலோனா, ரியல்மாட்ரிட் அணிகள் அதிர்ச்சி தோல்வி

லா லிகா கால்பந்து: பார்சிலோனா, ரியல்மாட்ரிட் அணிகள் அதிர்ச்சி தோல்வி
ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டி கடந்த மாதம் தொடங்கி நடந்து வருகிறது.
மாட்ரிட், 

ஸ்பெயினில் பிரபலமான லா லிகா கால்பந்து போட்டி கடந்த மாதம் தொடங்கி நடந்து வருகிறது. 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் முன்னாள் சாம்பியனான பார்சிலோனா நேற்று முன்தினம் நடந்த கெடாபி கிளப்புக்கு எதிரான ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. 

56-வது நிமிடத்தில் கெடாபி வீரர் ஜெமி மாட்டா பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்தார். பார்சிலோனா முன்னணி வீரர்கள் லயோனல் மெஸ்சி, கிரிஸ்மான் நெருங்கி வந்து சில வாய்ப்புகளை கோட்டை விட்டனர். இந்த சீசனில் பார்சிலோனா அணியின் முதல் தோல்வி இதுவாகும். இதுவரை 4 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வி என்று 7 புள்ளியுடன் 9-வது இடத்தில் இருக்கிறது.

இதே போல் நடப்பு சாம்பியன் ரியல் மாட்ரிட் அணி 0-1 என்ற கோல் கணக்கில் சிறிய அணியான கேடிஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. கேடிஸ் வீரர் அந்தோணி லோஜனோ 16-வது நிமிடத்தில் கோல் அடித்தார். கேடிஸ் அணி 29 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக ரியல்மாட்ரிட்டை வீழ்த்தியிருக்கிறது. ரியல்மாட்ரிட், கெடாபி, கேடிஸ் அணிகள் தலா 10 புள்ளிகளுடன் டாப்-3 இடங்களில் உள்ளன.


தொடர்புடைய செய்திகள்

1. சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: பார்சிலோனாவை பந்தாடியது பேயர்ன் முனிச்
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பேயர்ன் முனிச் அணி பார்சிலோனாவை பந்தாடியது.
2. லா லிகா கால்பந்து: முதலிடத்துக்கு முன்னேறியது, ரியல் மாட்ரிட்
லா லிகா கால்பந்து போட்டியில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
3. லா லிகா கால்பந்து: பார்சிலோனா அணி ஏமாற்றம்
லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது.
4. லா லிகா கால்பந்து போட்டி ஜூன் 11 ந்தேதி தொடக்கம்
லா லிகா கால்பந்து போட்டி ஜூன் 11 ந்தேதி தொடக்கம்; பாரவையாளர்கள் இல்லாமல்போட்டிகள் நடக்கும்