ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 2-வது வெற்றியை பெறுமா? - பெங்களூருவுடன் இன்று மோதல்


ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 2-வது வெற்றியை பெறுமா? - பெங்களூருவுடன் இன்று மோதல்
x
தினத்தந்தி 3 Dec 2020 11:44 PM GMT (Updated: 3 Dec 2020 11:44 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை அணி பெங்களூரு அணியுடன் இன்று மோதுகிறது.

கோவா,

11 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் 16-வது லீக் ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. அணி, முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி.யை எதிர்கொள்கிறது. சென்னை அணி தனது முதலாவது ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது. அடுத்த ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்சுடன் கோல் எதுவுமின்றி ‘டிரா’ கண்டது. வெற்றி பெற வேண்டிய அந்த ஆட்டத்தில் சென்னை அணி பெனால்டி வாய்ப்பை வீணடித்தது. சென்னை அணி நல்ல நிலைக்கு திரும்பி 2-வது வெற்றியை ருசிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். பெங்களூரு அணியை பொறுத்தமட்டில் தனது 2 லீக் ஆட்டங்களிலும் (கோவா, ஐதராபாத் அணிகளுக்கு எதிராக) ‘டிரா’ செய்தது.

சென்னை, பெங்களூரு அணிகள் இதுவரை 7 முறை சந்தித்து இருக்கின்றன. இதில் இரு அணிகளும் தலா 3 வெற்றிகளை பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. சமபலம் வாய்ந்த இரு அணிகளும் மோதும் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பற்றாக்குறை இருக்காது. இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

இதற்கிடையே நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஏ.டி.கே. மோகன் பகான் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்.சி. யை தோற்கடித்து தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பெற்றது.

Next Story