கால்பந்து

லா லிகா கால்பந்து: மெஸ்சி கோலால் பார்சிலோனா அணி வெற்றி + "||" + La Liga football Messi Goal Barcelona team wins

லா லிகா கால்பந்து: மெஸ்சி கோலால் பார்சிலோனா அணி வெற்றி

லா லிகா கால்பந்து: மெஸ்சி கோலால் பார்சிலோனா அணி வெற்றி
பார்சிலோனாவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் லயோனல் மெஸ்சி தலைமையிலான பார்சிலோனா கிளப் அணி, லெவாண்டே அணியை எதிர்கொண்டது.
பார்சிலோனா, 

20 அணிகள் இடையிலான லா லிகா கால்பந்து போட்டி தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது. இதில் பார்சிலோனாவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் லயோனல் மெஸ்சி தலைமையிலான பார்சிலோனா கிளப் அணி, லெவாண்டே அணியை எதிர்கொண்டது. பந்து அதிக நேரம் பார்சிலோனா அணியினரின் கட்டுப்பாட்டில் வலம் வந்தாலும் எதிரணியின் தடுப்பு அரணை தகர்த்து கோல் அடிக்க முடியாமல் தடுமாறினார்கள். இதனால் இந்த ஆட்டம் டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 76-வது நிமிடத்தில் பார்சிலோனா அணி கோல் அடித்தது. அந்த அணி வீரர் பிரெங்கி டி ஜோங் கடத்தி கொடுத்த பந்தை கேப்டன் மெஸ்சி கோல் வளையத்துக்குள் திணித்தார். அதன் பிறகு இரு அணியினரும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் பார்சிலோனா அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெலாண்டே அணியை தோற்கடித்தது. 11-வது ஆட்டத்தில் ஆடிய பார்சிலோனா அணி 5 வெற்றி, 2 டிரா, 4 தோல்வியுடன் 17 புள்ளிகள் பெற்று 8-வது இடத்தில் உள்ளது. ரியல் சோசிடாட் அணி 26 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. லா லிகா கால்பந்து: அட்லெட்டிகோ மாட்ரிட் வெற்றி
நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய ஒரு லீக் ஆட்டத்தில் அட்லெட்டிகோ மாட்ரிட் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஜெடாபி அணியை தோற்கடித்தது
2. லா லிகா கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி அசத்தல் வெற்றி
லா லிகா கால்பந்து போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது.