இந்திய கால்பந்து சம்மேளன துணை பொதுச்செயலாளராக முன்னாள் வீரர் நியமனம்


இந்திய கால்பந்து சம்மேளன துணை பொதுச்செயலாளராக முன்னாள் வீரர் நியமனம்
x
தினத்தந்தி 5 Jan 2021 10:56 PM GMT (Updated: 5 Jan 2021 10:56 PM GMT)

இந்திய கால்பந்து சம்மேளன துணை பொதுச்செயலாளராக முன்னாள் வீரர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி, 

இந்திய கால்பந்து அணியின் முன்னாள் முன்கள வீரரான அபிஷேக் யாதவ், அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் முதலாவது துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

40 வயது முன்னாள் சர்வதேச வீரரான அவர் ஓய்வுக்கு பிறகு இந்திய கால்பந்து அணியின் இயக்குனராகவும், இளம் வீரர், வீராங்கனைகளை அடையாளம் கண்டு அவர்களது ஆட்ட வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்கும் பணியிலும் திறம்பட செயல்பட்டு இருக்கிறார். 2017-ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான இந்திய அணியின் தலைமை ஆபரேட்டிங் அதிகாரியாகவும் பணியாற்றி உள்ளார். புதிய பொறுப்பில் அபிஷேக் யாதவ் சிறப்பாக செயல்பட அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் பிரபுல் பட்டேல், பொதுச்செயலாளர் குஷால் தாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Next Story