ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: கடைசி நிமிட கோலால் கேரளா வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: கடைசி நிமிட கோலால் கேரளா வெற்றி
x
தினத்தந்தி 20 Jan 2021 10:30 PM GMT (Updated: 20 Jan 2021 8:17 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 65-வது லீக் ஆட்டத்தில் கேரளா அணி வெற்றி பெற்றது.

கோவா,

11 அணிகள் இடையிலான 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 65-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி.க்கு அதிர்ச்சி அளித்தது. 

ஆட்டம் டிராவை நோக்கி நகர்ந்த நிலையில் கடைசி நிமிடத்தில் (90-வது நிமிடம்) கேரளா வீரர் ராகுல் அருமையாக கோல் அடித்து வெற்றியை தேடித்தந்தார். 12-வது லீக்கில் ஆடிய கேரளாவுக்கு இது 3-வது வெற்றியாகும். பெங்களூரு அணி சந்தித்த 5-வது தோல்வியாகும். இன்றைய லீக் ஆட்டத்தில் (இரவு 7.30 மணி) சென்னையின் எப்.சி.- ஏ.டி.கே.மோகன் பகான் அணிகள் மோதுகின்றன.

Next Story