ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணியிடம் மும்பை தோல்வி


ஐ.எஸ்.எல். கால்பந்து: பெங்களூரு அணியிடம் மும்பை தோல்வி
x
தினத்தந்தி 16 Feb 2021 1:11 AM GMT (Updated: 16 Feb 2021 1:11 AM GMT)

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 95-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின.

கோவா, 

7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 95-வது லீக் ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்.சி.-பெங்களூரு எப்.சி. அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பெங்களூரு அணி 4-2 என்ற கோல் கணக்கில் மும்பைக்கு அதிர்ச்சி அளித்து 5-வது வெற்றியை ருசித்தது. பெங்களூரு அணியில் கிளைட்டன் சில்வா முதலாவது, 22-வது நிமிடங்களிலும், கேப்டன் சுனில் சேத்ரி 57-வது, 90-வது நிமிடங்களிலும் கோல் அடித்தனர். மும்பை அணியில் ஆடம் லி போன்ட்ரே 50-வது மற்றும் 72-வது நிமிடங்களில் கோல் திருப்பினார். அரைஇறுதி வாய்ப்பை ஏற்கனவே உறுதி செய்து விட்ட மும்பை அணி சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும்.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. அணிகள் சந்திக்கின்றன. 

Next Story