உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: ஜெர்மனி அணி அதிர்ச்சி தோல்வி


உலக கோப்பை கால்பந்து தகுதி சுற்று: ஜெர்மனி அணி அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 1 April 2021 10:07 PM GMT (Updated: 1 April 2021 10:07 PM GMT)

கத்தாரில் அடுத்த ஆண்டு (2022) இறுதியில் நடைபெறும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான ஐரோப்பிய மண்டல தகுதி சுற்று போட்டிகள் பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள 55 அணிகள் 10 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.

‘ஜெ’ பிரிவில் இடம் பிடித்துள்ள 4 முறை உலக சாம்பியனான ஜெர்மனி அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் வடக்கு மாசிடோனியாவை சந்தித்தது. இந்த போட்டி ஜெர்மனியில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜெர்மனி அணி 1-2 என்ற கோல் கணக்கில் வடக்கு மாசிடோனியாவிடம் அதிர்ச்சி தோல்வி கண்டது. இந்த தோல்வியின் மூலம் உலக கோப்பை தகுதி சுற்று வரலாற்றில் தொடர்ச்சியாக 18 வெற்றிகளை ருசித்து இருந்த ஜெர்மனியின் வெற்றிப்பயணம் முடிவுக்கு வந்தது. அத்துடன் தகுதி சுற்றில் 20 ஆண்டுகளில் ஜெர்மனி அணி சந்தித்த முதல் தோல்வியும் இது தான். இதுவரை ஜெர்மனி அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் தனது பிரிவில் 3-வது இடத்தில் உள்ளது.


Next Story