கால்பந்து

சோனி சேனலில் யூரோ கால்பந்து போட்டி தமிழில் ஒளிபரப்பு + "||" + Euro football match telecast in Tamil on Sony channel

சோனி சேனலில் யூரோ கால்பந்து போட்டி தமிழில் ஒளிபரப்பு

சோனி சேனலில் யூரோ கால்பந்து போட்டி தமிழில் ஒளிபரப்பு
சோனி சேனலில் யூரோ கால்பந்து போட்டி தமிழில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது.
மும்பை,

ஜெர்மனி, போர்ச்சுகல், பிரான்ஸ், ஸ்பெயின், ரஷியா, இங்கிலாந்து உள்பட 24 அணிகள் பங்கேற்கும் 16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் (யூரோ) போட்டி வருகிற 11-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி வரை 11 நாடுகளில் நடக்கிறது. இதே போல் இந்த ஆண்டில் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியும் நடக்க உள்ளது. இவ்விரு போட்டிகளையும் நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிமம் பெற்றிருக்கும் சோனி நெட்வொர்க் குழுமம் தற்போது இந்தியாவில் கால்பந்து ரசிகர்களை மேலும் ஈர்க்கும் வகையில் பிராந்திய மொழிகளில் ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது.

இதன்படி யூரோ கால்பந்து போட்டி ஆங்கிலம், இந்தி, தமிழ், பெங்காலி, தெலுங்கு, மலையாளம் ஆகிய 6 மொழிகளில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. ஏற்கனவே சோனி சிக்ஸ், சோனி டென்1, சோனி டென் 2, சோனி டென்3 ஆகிய சேனல்கள் உள்ள நிலையில் பிராந்திய மொழி ஒளிபரப்புக்காக சோனி டென்4 என்ற புதிய சேனல் தொடங்கப்பட்டு உள்ளது. தமிழ் வர்ணனையாளர்களாக பிரதீப் கிருஷ்ணா, சுதீர் சீனிவாசன், அபிஷேக் ராஜா மற்றும் நல்லப்பன் மோகன் ராஜ் ஆகியோர் பணியாற்ற உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கீழக்கரை அருகே ஐவர் கால்பந்து போட்டி
கீழக்கரை அருகே ஐவர் கால்பந்து போட்டி நடந்தது.