வேல்ஸ் அணியை ஊதித்தள்ளி டென்மார்க் கால்இறுதிக்கு முன்னேற்றம்


வேல்ஸ் அணியை ஊதித்தள்ளி டென்மார்க் கால்இறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 27 Jun 2021 2:50 AM GMT (Updated: 27 Jun 2021 2:50 AM GMT)

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் ஆம்ஸ்டர்டாமில் நேற்று நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் டென்மார்க் அணி, வேல்சை எதிர்கொண்டது.

ஆம்ஸ்டர்டாம், 

முதல் 25 நிமிடங்களில் வேல்ஸ் அணியினர் 7 ஷாட்டுகள் வரை அடித்து பார்த்தும் பலன் இல்லை. அதே சமயம் 27-வது நிமிடத்தில் சக வீரர் டாம்ஸ்கார்டு தட்டிச்கொடுத்த பந்தை டென்மார்க்கின் கேஸ்பர் டோல்பெர்க் கோல் அடித்து அதிர்ச்சி அளித்தார். முதலில் இது ஆப்சைடு கோலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் நடுவர் வீடியோ பதிவை ஆய்வு செய்தார். அதன் பிறகு இது சரியான கோல் தான் என்று அறிவித்தார். பிற்பாதியில் 48-வது நிமிடத்தில் டென்மார்க் வீரர் டோல்பெர்க் மீண்டும் ஒரு கோல் போட வேல்ஸ் அணியினரால் அதன் பிறகு நிமிர முடியவில்லை. கடைசி கட்டத்தில் டென்மார்க்கின் ஜோகிம் மாலேவும் (88-வது நிமிடம்), பிராத்வெயிட்டும் (90-வது நிமிடம்) தலா ஒரு கோல் போட்டனர். முடிவில் டென்மார்க் 4-0 என்ற கோல் கணக்கில் வேல்சை பந்தாடி கால்இறுதிக்குள் நுழைந்தது. கடந்த சாம்பியன்ஷிப்பில் அரைஇறுதிவரை முன்னேறி இருந்த வேல்ஸ் இந்த தடவை 2-வது சுற்றுடன் நடையை கட்டியது.

Next Story