கால்பந்து

பெனால்டி ஷூட்-அவுட்டில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணி அரைஇறுதிக்கு தகுதி + "||" + Spain beat Switzerland in a penalty shootout to advance to the semi-finals

பெனால்டி ஷூட்-அவுட்டில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணி அரைஇறுதிக்கு தகுதி

பெனால்டி ஷூட்-அவுட்டில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணி அரைஇறுதிக்கு தகுதி
பெனால்டி ஷூட்-அவுட்டில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தி ஸ்பெயின் அணி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க்,

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் நேற்று நடந்த முதலாவது கால்இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி, சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணிக்கு 8-வது நிமிடத்தில் கோல் வந்தது. கார்னரில் இருந்து வந்த பந்தை ஸ்பெயின் அணி வீரர் ஜார்டி ஆல்பா கோல் வலையை நோக்கி அடித்தார். அந்த பந்து சுவிட்சர்லாந்து நடுகள வீரர் டெனிஸ் ஜகாரியா காலில் பட்டு கோல் வலைக்குள் புகுந்து சுய கோலானது.

68-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி கேப்டன் ஹெர்டான் ஷாகிரி இந்த கோலை அடித்தார். இதனால் சமநிலை (1-1) ஏற்பட்டது. 77-வது நிமிடத்தில் எதிரணி வீரரின் காலில் பலமாக மிதித்த சுவிட்சர்லாந்து வீரர் ரெமோ புருலெர் நடுவரால் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டதால் அதன் பிறகு அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டியதானது. இருப்பினும் தடுப்பு ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட அந்த அணியினர் ஸ்பெயினின் பல வாய்ப்புகளை முறியடித்தனர். குறிப்பாக சுவிட்சர்லாந்து கோல்கீப்பர் சோமெர் ஹீரோவாக ஜொலித்தார். வழக்கமான 90 நிமிடம் முடிவில் சமநிலை நீடித்ததால் கூடுதலாக 30 நிமிடம் ஒதுக்கப்பட்டது. அதிலும் முடிவு கிடைக்கவில்லை. இதனை அடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ‘ஷூட்-அவுட்’ முறை கடைபிடிக்கப்பட்டது. பரபரப்பான பெனால்டி ஷூட்-அவுட்டில் ஸ்பெயின் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு முன்னேறியது