கோபா அமெரிக்கா கால்பந்து; அர்ஜெண்டினா அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்


கோபா அமெரிக்கா கால்பந்து; அர்ஜெண்டினா அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 4 July 2021 9:26 AM GMT (Updated: 2021-07-04T14:56:21+05:30)

ஈகுவேடார் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அர்ஜெண்டினா அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

யோடிஜெனீரோ,

47-வது கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி பிரேசில் நாட்டில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது. அதில் இன்று நடைபெற்ற கால் இறுதி சுற்றில் ஈகுவாடர் அணியும், அர்ஜென்டினா அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பாதியின் இறுதி கட்டத்தில், அர்ஜென்டினாவின் ரோட்ரிகோ டி பால் முதல் கோல் அடித்தார்.

இதன்மூலம், முதல் பாதியில் அர்ஜென்டினா அணி முன்னிலை பெற்றது. தொடர்ந்து, இரண்டாம் பாதியில் 84வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் லாடாரோ மார்ட்டினசும், 93வது நிமிடத்தில் மெஸ்ஸியும் அடுத்தடுத்து கோல் அடித்தனர். ஈகுவாடர் அணி தரப்பில் எந்த கோலும் அடிக்க முடியவில்லை. இதன்மூலம், 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அர்ஜென்டினா அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

ஏற்கனவே பிரேசில், பெரு, கொலம்பியா அணிகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இன்றைய ஆட்ட முடிவின் மூலம் அரையிறுதி ஆட்டத்தில் கொலம்பியாவுடன் அர்ஜெண்டினா மோத இருப்பது உறுதியாகியுள்ளது. அதற்கு முன்பாக பிரேசில் மற்றும் பெரு அணிகள் மோதிக்கொள்ளும் அரையிறுதி ஆட்டமும் நடைபெற உள்ளது.

Next Story