கால்பந்து

ஒலிம்பிக் கால்பந்து போட்டி: அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது சுவீடன் + "||" + Olympic football: Sweden shocked the United States

ஒலிம்பிக் கால்பந்து போட்டி: அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது சுவீடன்

ஒலிம்பிக் கால்பந்து போட்டி: அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்தது சுவீடன்
ஒலிம்பிக் கால்பந்து போட்டியில் சுவீடன் அணி அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்து வீழ்த்தியது.
டோக்கியா, 

டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு முறைப்படி நாளை தொடங்கினாலும் கால்பந்து, சாப்ட்பால் ஆகிய போட்டிகள் நேற்றே ஆரம்பித்து விட்டன. இதில் கால்பந்து பெண்கள் பிரிவில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. ‘ஜி’ பிரிவில் நடந்த ஒரு லீக்கில் சுவீடன் அணி 3-0 என்ற கோல் கணக்கில் உலக சாம்பியனும், ஒலிம்பிக்கில் 4 தங்கம் வென்ற அணியுமான அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்து வீழ்த்தியது. 

இதன் மூலம் தொடர்ச்சியாக 44 ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட அமெரிக்காவின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது. ‘எப்’ பிரிவில் நடந்த ஆட்டங்களில் பிரேசில் 5-0 என்ற கோல் கணக்கில் சீனாவையும், நெதர்லாந்து 10-3 என்ற கோல் கணக்கில் ஜாம்பியாவையும் ஊதித்தள்ளியது. பிரேசில் அணியில் 2 கோல் போட்ட மார்ட்டா தொடர்ச்சியாக 5 ஒலிம்பிக்கில் கோல் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார்.