கால்பந்து

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி வெற்றி + "||" + Champions League football: Real Madrid team wins

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி வெற்றி

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி வெற்றி
சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது.
மிலன், 

ஐரோப்பிய கிளப் அணிகளுக்கான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. குறிப்பிட்ட நாட்களில் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறும்.

இதில் ‘ஏ’ பிரிவில் நேற்று முன்தினம் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் லயோனல் மெஸ்சி, நெய்மார், கைலியன் எம்பாப்பே உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களை உள்ளடக்கிய பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்), பெல்ஜியத்தை சேர்ந்த கிளப்பான புருக்ஜியை எதிர்கொண்டது. பெல்ஜியத்தில் நடந்த விறுவிறுப்பான இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’வில் முடிந்தது. மெஸ்சி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கோல் அடிக்காமல் ஏமாற்றம் அளித்தனர். 

இதே பிரிவில் உள்ளூரில் நடந்த ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி (இங்கிலாந்து) 6-3 என்ற கோல் கணக்கில் ரெட்புல் லெப்ஜிக் (ஜெர்மனி) அணியை பந்தாடியது. ‘பி’ பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் லிவர்பூல் (இங்கிலாந்து) அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஏ.சி.மிலனை (இத்தாலி) வீழ்த்தியது. ‘டி’ பிரிவில் நடந்த ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் 1-0 என்ற கோல் கணக்கில் இன்டர் மிலனை (இத்தாலி) சாய்த்தது.