ப்ரீமியர் லீக் கால்பந்து: மான்செஸ்டர் சிட்டி வெற்றி!


ப்ரீமியர் லீக் கால்பந்து: மான்செஸ்டர் சிட்டி வெற்றி!
x
தினத்தந்தி 22 Nov 2021 9:26 AM GMT (Updated: 22 Nov 2021 9:26 AM GMT)

ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரில் எவர்டன் அணியை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி அணி.

புதுடெல்லி,
 
ப்ரீமியர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய போட்டியில் மான்செஸ்டர் சிட்டி-எவர்டன்  அணிகள் பலப்பரிட்சை நடத்தின. எவர்டன்  அணிக்கு எதிரான இந்த போட்டியில் 3-0 எனும் கோல் கணக்கில் மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றி பெற்றது.

மான்செஸ்டர் சிட்டி அணி இந்த தொடரில் இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகளில் வெற்றி பெற்று 26 புள்ளிகளுடன்  புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது.

செல்சியா அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில்  நீடிக்கிறது. லிவர்பூல் அணி 25 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் உள்ளது.


Next Story