கால்பந்து

ஐ.எஸ்.எல் கால்பந்து: இரண்டாம் கட்ட ஆட்டங்களின் அட்டவணை வெளியீடு + "||" + Schedule for IndSuperLeague second half released, league stage will run till March 5

ஐ.எஸ்.எல் கால்பந்து: இரண்டாம் கட்ட ஆட்டங்களின் அட்டவணை வெளியீடு

ஐ.எஸ்.எல் கால்பந்து: இரண்டாம் கட்ட ஆட்டங்களின்  அட்டவணை வெளியீடு
கடைசி லீக் போட்டியில் எப்சி கோவா அணி கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் விளையாட உள்ளது.
கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடர் (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஆண்டைப் போல கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெற்று வருகிறது. இந்த கால்பந்து  லீக் சுற்று போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 5ம் தேதி வரை நடைபெற உள்ளன.

தற்போது நடைபெற்று வரும் முதல் கட்ட போட்டிகள் டிசம்பர் 30ம் தேதியுடன் நிறைவடைய உள்ளன. முதல் பாகத்தின் கடைசி போட்டியில் சென்னையின் எப்சி அணி பெங்களூரு எப்சி அணியை எதிர்கொள்ள உள்ளது.

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 10ம் தேதி முதல் இரண்டாம் கட்ட ஆட்டங்கள் தொடங்கி, தொடர்ந்து  55 நாட்கள் நடைபெறும் என்று கால்பந்து விளையாட்டு மேம்பாடு லிமிடட்(எப் எஸ் டி எல்)  அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த போட்டிகள் அனைத்தும் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமாகும்.கடைசி லீக் போட்டியில் எப்சி கோவா அணி கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் விளையாட உள்ளது.  

தொடர்புடைய செய்திகள்

1. பிரதமர் மோடியுடன் கோவா முதல் மந்திரி சந்திப்பு
கோவாவில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
2. பிரதமர் மோடி முன்னிலையில் கோவா முதல்-மந்திரியாக பிரமோத் சவந்த் இன்று மீண்டும் பதவி ஏற்பு..!!
பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெறும் விழாவில், கோவா முதல்-மந்திரியாக பிரமோத் சவந்த் இன்று மீண்டும் பதவி ஏற்க உள்ளார்.
3. ஐ.எஸ்.எல் கால்பந்து : கேரளா-ஹைதராபாத் அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்
ஹைதராபாத் அணி ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியில் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது இதுவே முதல் முறையாகும்
4. ஐ.எஸ்.எல் கால்பந்து : மோகன் பகான் அணியை வீழ்த்தி இறுதி போட்டிக்குள் நுழைந்தது ஐதராபாத் அணி
வரும் 20-ஆம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் கேரளா மற்றும் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
5. ஐ.எஸ்.எல் கால்பந்து : அரையிறுதி : ஏ.டி.கே.மோகன் பகான்- ஹைதராபாத் அணிகள் இன்று மோதல்
இன்று நடைபெறும் இறுதி அரையிறுதி சுற்றில் மோகன் பகான் அணி ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன