ஐ.எஸ்.எல் கால்பந்து அரைஇறுதி: ஐதராபாத் எப்.சி அணி வெற்றி..!


image courtesty: Indian Super League twitter
x
image courtesty: Indian Super League twitter

ஐ.எஸ்.எல் கால்பந்து அரைஇறுதியின் முதல் சுற்று ஆட்டத்தில் ஐதராபாத் எப்.சி மற்றும் ஏ.டி.கே மோகன் பகான் அணிகள் மோதின.

கோவா,

8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் ஜாம்ஷெட்பூர் (13 வெற்றி, 4 டிரா, 3 தோல்வி), ஐதராபாத் (11 வெற்றி, 5 டிரா, 4 தோல்வி), ஏ.டி.கே.மோகன் பகான் (10 வெற்றி, 7 டிரா, 3 தோல்வி), கேரளா பிளாஸ்டர்ஸ் (9 வெற்றி, 7 தோல்வி, 4 டிரா) ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. 

அரைஇறுதியில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு எதிரான அணியுடன் 2 முறை மோத வேண்டும். இதன் முடிவில் அதிக வெற்றி அல்லது கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

முன்னதாக ஜாம்ஷெட்பூர் மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற அரைஇறுதியின் முதல் சுற்று ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் நேற்றிரவு நடந்த அரைஇறுதியின் முதலாவது சுற்றில் ஐதராபாத் எப்.சி மற்றும் முன்னாள் சாம்பியன் ஏ.டி.கே மோகன் பகான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஏ.டி.கே. மோகன் பகான் அணியை வீழ்த்தியது. இதன் 2-வது சுற்று வருகிற 16-ந்தேதி நடக்கிறது. இதில் ஐதராபாத் அணி டிரா செய்தாலே இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடலாம்.

Next Story