ஐ.எஸ்.எல்.கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் வெற்றி


ஐ.எஸ்.எல்.கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி கேரளா பிளாஸ்டர்ஸ் வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஈஸ்ட் பெங்கால்-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

கொல்கத்தா,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் ஈஸ்ட் பெங்கால்-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி சார்பில் தாய்சுகே ஆட்டத்தின் 32-வது நிமிடத்திலும் திமித்ரியோஸ் 88-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். ஈஸ்ட் பெங்கால் அணி சார்பில் கிளெய்ட்டன் சில்வா ஆட்டத்தின் 90+9-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story