ஹாக்கி

ராணி சொல்லும் ரகசியம்! + "||" + The secret of the queen!

ராணி சொல்லும் ரகசியம்!

ராணி சொல்லும் ரகசியம்!
“இப்போதெல்லாம் நாம் அதிக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறோம்... வலுவான பிற நாட்டு அணிகளுடன் மோதுகிறோம்.
“இப்போதெல்லாம் நாம் அதிக வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்கிறோம்... வலுவான பிற நாட்டு அணிகளுடன் மோதுகிறோம். அதுதான் நமது ஆட்டத்தரம் உயர்ந்திருப்பதன் ரகசியம்” என்கிறார், இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால்.

ஒரு கேப்டனாக, அணியின் இளம் வீராங்கனைகளை ஊக்குவிப்பது தனது முக் கியப் பொறுப்பு என்கிறார், இவர்.

“அணித் தலைவராக நாம் களத்தில் சக வீராங்கனைகளுடன் கலந்துரையாடவும், ஒருங்கிணைத்துச் செல்லவும் வேண்டும். அதேபோல இளம் வீராங்கனைகளை ஊக்குவித்து நன்றாக ஆடவைப்பதும் முக்கியம்” என்கிறார்.

சமீபகாலமாக இந்திய பெண்கள் ஆக்கி அணியில் ஜொலிக்கும் வீராங்கனை யார் என்று கேட்டால்,

“சமீபத்திய போட்டிகளில், எங்கள் பயிற்சியாளர் வகுத்துத் தந்த திட்டத்தின்படியும், அணி ஒருங்கிணைப்பு முடிவின்படியும் ஒவ்வொரு வீராங்கனையுமே நன்றாக விளையாடியிருக்கின்றனர், அணியின் வெற்றிக்குப் பங்களித்திருக்கின்றனர்” என்கிறார் ராணி.

இந்த அரியானா மங்கையின் தலைமையில் இந்திய ஆக்கிப் பெண்கள் எப்படிச் செயல்படுகின்றனர் என்று பார்ப்போம்.